செய்தித் துளிகள்
                                          click here
                                                            


                                                                      
04.09.2016 - எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்தஒன்றுகூடலும் மதியபோசன விருந்தும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

                                                                    

 Sports meet - 2016

                                                                       

 2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி


                                                                      

17.01.2016 - இன்று நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச்சங்க விசேட கூட்டத்தில் வகுப்பறைகளுக்கென 16 அலுமாரிகள் பல்வேறு தரப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

                                                                      

 A/L RESULTS - 2015

                                                                      

 2015.12.04 - எமது கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் பணியாற்றி ஓய்வுநிலை பெற்றிருக்கும் திரு.க.குணம் அவர்களுக்கும் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கும் தொண்டர் அசிரியருக்கும் கல்விசாரா ஊழியருக்குமான சேவைநலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

                                                                    

 2015.12.03 - எமது கல்லூரி ஒளி விழா 


                                                                           

 தொழில்நுட்பபீட திறப்பு விழா - 14.11.2015


                                                                

 பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்; - 2015

31.10.2015 - எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்; அதிபர் திரு.நா.தனபாலசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

                                                                      

2015.10.21 - வாணிவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் இல்லங்களுக்கிடையிலான மாலைகட்டுதல்,கோலம் போடுதல் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றியவர்களுக்கான ஆறுதல்பரிசுகளும் சகலகலாவல்லிமாலைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.


                                                                 

 இல்லப் போட்டி – 2016 இற்கான மாலைகட்டும் போட்டியும் கோலப்போட்டியும் 2015.10.17 சனிக்கிழமை எமது பாடசாலை அதிபர் திரு.நா.தனபாலசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

                                                                  

 பரிசளிப்பு விழா – 2015

எமது கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் நினைவு நாளும் 2015.09.15 மு.ப.09.00மணிக்கு நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


                                                                    

 புதிய அதிபர் நியமனம்

எமது பாடசாலைக்கு புதிய அதிபராக திரு.நா.தனபாலசிங்கம் அவர்கள் 01.09.2015 தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் எமது பாடசாலையில் முன்னர் நீண்டகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்பதும் எமது கல்லூரியின் கொடிகீதம் இவரால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 மீண்டும் ஒரு சாதனை

 


2015.06.03- 2015 ஆம் ஆண்டு மாகாணமட்ட பெண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் போட்டியில் எமது பாடசாலை இவ்வருடமும் 3 ஆம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

 2015 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது பாடசாலை 1 ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

 2015.02.13 – எமது பாடசாலையின் 2015ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடைபெற்றது. 

                                                                                           Click here

 2015.02.05 - கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்    அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் E.சரவணபவன் அவர்களும்  எமது பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.

                                                                      

 2015.02.01- எமது பாடசாலையின் 2015 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி(10 Km) இன்று நடைபெற்றது.சிரேஸ்ட ஆசிரியர் திரு.க.கிருஸ்ணமூரத்தி அவர்கள் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

செல்வன்.S.சிவகரன் - 1ம் இடம் - சிவப்பு இல்லம்

செல்வன்.N.சுலோஜன் - 2ம் இடம் - சிவப்பு இல்லம்

செல்வன்.K.விநோத் - 3ம் இடம் - பச்சை இல்லம்


 க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2014 சிறந்த பெறுபேறுகள் 

கணிதத்துறை – செல்வன்.எஸ்.கோபிசாந் - A,B,C

உயிரியல் துறை – செல்வி.எஸ்.சிந்துஜா - A,2B

வணிகத்துறை - செல்வி.ரி.யதுசா  - A,2B

கலைத்துறை - செல்வி.எஸ்.சாயினி - 2A,B


 பரிசளிப்பு விழா - 2014

                                       CLICK HERE

 

 எமது பாடசாலையில் உள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் 14.10.2014 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணிக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

                                                        Click here

 

 

 கல்விச் சுற்றுலா - 2014

                                                        click here

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்தின்
அடிக்கல் நாட்டு விழா
26.06.2014 - மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.வடமாகாண சபையின் கௌரவ ஆளுநர் மேஜர் ஜெனரல் G.A.சந்திரசிறி அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களும் பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.மேலும் உயரதிகாரிகள் பலரும் இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

                                                                       

பிற்போடப்பட்டுள்ளது.

மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட அடிக்கல் நாட்டுவிழாவும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கௌரவ கல்வி அமைச்சர் வருகைதர இயலாத காரணத்தால் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட அடிக்கல் நாட்டு விழாவும்
 
 
மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட அடிக்கல் நாட்டு விழாவும் 18.06.2014 புதன்கிழமை மு.ப.09.30 மணிக்கு எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

                                                                     

 

வட்டு இந்துவின் விளையாட்டு சாதனை தொடர்கிறது.

03.06.2014 - மாகாணமட்ட பெண்களுக்கான கிறிக்கெற் போட்டியில் எமது பாடசாலை அணி 3 ஆம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது.

 

 வணிக எறியம் நூல் வெளியீடு - 2014

                                                              

 22.04.2014 - எமது பாடசாலையில் நற்பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


                                                                    

 2014.04.25 -  மாவட்ட மட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது பாடசாலை அணிசிறப்பா விளையாடி 3ஆம் இடத்தைப்பெற்று  மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது

 

 

2014.04.20 -  மாவட்ட மட்ட பெண்களுக்கான மென்பந்து கிறிக்கற்போட்டியில் எமது பாடசாலை அணிசிறப்பா விளையாடி 2ஆம் இடத்தைப்பெற்று  மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது

 

வலயமட்ட எல்லே போட்டியில் பெண்கள் அணி 1ஆம் இடத்தையும் ஆண்கள் அணி 2ஆம் இடத்தையும் பெற்று மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
க.பொ.த.சாதாரண தர பரீட்சைப் பெறுபேறு – 2013

        செல்வி.பிறேமகாந்தன் ரிஷிகாந்தி – 9A

                                                                         

2014 ஆம் ஆண்டுக்கான கோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலை 32 முதலாம் இடங்களையும் 26 இரண்டாம் இடங்களையும் 25 மூன்றாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
                                                                        

 

13.03.2014 - வலயமட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் எமது பாடசாலையின் பெண்கள் அணி 3ஆம் இடத்தைப் பெற்று மாவட்டமட்டப்போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப்பெற்றுள்ளது.

 

 

09.03.2014 - எமது உயர்தர மாணவர் மன்றத்தினரின் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

                                                                     
வலயமட்ட பட்மின்ரன் போட்டியில்(2014) எமது பாடசாலையின் 15 வயதுப்பிரிவு ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் 3 ஆம் இடத்தினைப் பெற்று மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

 

 2014.03.04 - இன்று நடைபெற்ற வலயமட்ட பெண்களுக்கான மென்பந்து கிறிக்கற்போட்டியில் எமது பாடசாலை அணி சிறப்பா விளையாடி 2ஆம் இடத்தைப்பெற்று மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது.கடந்த வருடம் 3ஆம் இடத்தைப் பெற்ற எமது அணி இவ்வருடம் 2ஆம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


காங்கேசன்துறை மாவட்ட சாரணர்பாசறைப் போட்டியில்(2014) எமது               பாடசாலைமாணவர்கள் பல வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

 

 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி - 2014


                                                                          

 20.01.2014 - இன்று நடைபெற்ற இல்லங்களுக்கு இடையிலான (10km ) மரதன் ஓட்டப்போட்டியில்

 செல்வன.சி.;சிவகரன்( சிவப்பு இல்லம்) 1ஆம் இடம்( 32 நிமிடம்)

செல்வன்.க.லக்ஸ்மன்( சிவப்பு இல்லம்) 2ஆம் இடம்

செல்வன்.க.நிக்ஸன்( சிவப்பு இல்லம்) 3ஆம் இடம் 

 10.01.2014 – மும்மொழிகளிலான பாடசாலையின் பெயர்ப்பலகைத்திறப்பு நிகழ்வும் விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

                                                                              Click here 

 

 2013 க.பொ.த.உ/த பரீட்சையில்   கலைப்பிரிவில்  செல்வி.சி.அனுசியா 2A 1B பெற்றுள்ளார்.

 

2013 க.பொ.த.உ/த பரீட்சையில்  வணிகப்பிரிவில் செல்வன்.ஆ.நாகதீபன் 1A 2B (மாவட்ட நிலை 73 ) பெற்றுள்ளார்.

 2013 க.பொ.த.உ/த பரீட்சையில்  விஞ்ஞானப்பிரிவில் செல்வன்.த.சிவகணேசன் 1A 1B 1Cபெற்றுள்ளார்.

 

 

 05.12.2013 – எமது பாடசாலையில் ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட கிறிஸ்துவுக்கான இளைஞர்சபை இயக்குனர் திருவாளர் டனீஸியஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


                                                                      

29.11.2013 - எமது பாடசாலைக்கு வருகைதந்த பழையமாணவர் திரு.S.தனுசன் அவர்கள் ரூ.25000ஐ க.பொ.த. உயர்தரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் துறையின் வளர்ச்சிக்காக அன்பளிப்பாக வழங்கினார்.

 பலமான போட்டி

05.11.2013 – 2013 ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் இன்று 16 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் வட்டு இந்துக்கல்லூரி அணியும் அராலி இந்துக்கல்லூரி அணியும் பலமாக மோதிக்கொண்டன. இரண்டு அணிகளும் சமமான வெற்றிகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டின் மூலம் அராலி இந்துக்கல்லூரி வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Prize Day  -  2013 

                                                          Click here                                                                                                                                                                                              

  காங்கேசன்துறை மாவட்ட சாரணர்பாசறைப் போட்டியில்(2013) எமது               பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.

                                                             Click Here 

World Teachers Day

                                                                

2013 - மாகாண மட்ட ஆங்கில மொழிப்போட்டியில்(Dictation) செல்வி.பிறேமகாந்தன் ரிஷிகாந்தி 1 ஆம் இடத்தைப்பெற்றுள்ளார்.17.09.2013 - புதிய 2மாடிக்கட்டட திறப்புவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.வடமாகாண கல்விஅமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

                                                                           

 

01.08.2013 - இங்கிலாந்திலிருந்து தனது குடும்பத்தினருடன் வருகை தந்த எமது பாடசாலையின் இலண்டன் பழையமாணவர் சங்கச் செயலாளர் திரு.அ.சிதம்பரநாதன் அவர்கள் பாடசாலையின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
16.07.2013 - எமது பாடசாலையில் கல்விபயிலும் உதவி தேவைப்படும் மாணவருக்கு உதவும் நோக்குடன் உதவும் கரங்கள் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது பாடசாலை ஆசிரியர் திரு.சி.திருக்குமரன் அவர்களின் உள்ளத்தில் உருவான சிந்தனை செயல்வடிவம் பெற்று  இந் நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

03.07.2013 - நோர்வே நாட்டிலிருந்து வருகை தந்த எமது பாடசாலையின் பழைய மாணவர் திரு.சி.ஸ்ரீகரன் அவர்கள் 2 மடிக்கணினிகளை(Laptop) பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

 

வணிகப்போட்டி, மனைபொருளியல் போட்டி, சமூகவிஞ்ஞானப் போட்டி , விசேட தேவையுடைய மாணவருக்கான போட்டி போன்ற பல போட்டிகளிலும் எமது மாணவர்கள் பல வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

                                                                             

எமது பாடசாலையில் நற்பணியாற்றி இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களான திருமதி.ம.கமலாதேவி , திரு.சி.யேசுரட்ணம் ,திருமதி.த.இந்திரா, திருமதி.பு.சகுந்தலாதேவி, செல்வி.த.நிஸ்பந்தி,  திருமதி.த.சுலோயினி,  திருமதி.த. அனித்தா, செல்வி.க.கலைவாணி  ஆகியோருக்கான பிரிவுபசார விழா 2013.06.07 இல் ஆசிரியர் நலன்புரிச்சங்க   உப தலைவர் திரு.ப.காண்டீபன்  அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

                                                                           

எமது பாடசாலை மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
2013.05.26 - எமது பாடசாலையின் உயர்தர மாணவர் மன்றம் நடாத்தும் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. செல்வன்.தி.அனுஜன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் வலிகாமம் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.பொ .ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

                                                                          

2013.05.23 - அமெரிக்காவிலிருந்து வருகைதந்துள்ள எமது பாடசாலையின் பழைய மாணவன் திரு.நடராசா முருகதாஸ் (பண்ணாகம்,சுழிபுரம்) அவர்கள் ரூபா 25000 ஆரம்ப நிதியாக அன்பளிப்புச்செய்து  மாணவர் கற்றல் மேம்பாட்டுக்கான ஆசிரியர் நிதியத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

 

 

வில்லுப்பாட்டு  பிறந்த கதை


 

2013.05.03 - எமது பாடசாலையில்
கலைமாமணி சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களின் ஆன்மீகச்சொற்பொழிவு இடம்பெற்றது.

 

                             
02.01.2015 வரை கிடைத்தநிதி - ரூ.54700.00
                                                                   
பாடசாலை அபிவிருதிச்சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்- 2014

 மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம்

இந்த மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம், அறிவியல் ஆய்வு கூடம், கணித ஆய்வு கூடம், மொழி ஆய்வு கூடம், தொலைக் கல்வி அலகு மற்றும்  கணினிகளைக் கொண்ட முழுநிறைவான தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப ஆய்வு கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

                                                                          

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை - 2012 (தமிழ்)

                                                                      

 23.08.2013 - எமது பாடசாலைக்கு நோர்வேயிலிருந்து வருகை தந்த பழையமாணவன் திரு.S.குகநேசன் அவர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்காக ரூ.15000ஐ அன்பளிப்பாக வழங்கினார்.

07.08.2013 - எமது பாடசாலைக்கு டுபாயிலிருந்து வருகை தந்த எமது பாடசாலையின் பழைய மாணவன் திரு.பொ.கண்ணதாசன் அவர்கள் உதவும் கரங்கள் நிதியத்திற்கு வருடாந்தம் ரூ.6000ஐ வழங்கமுன்வந்துள்ளார்.
17.07.2013 - கனடாவிலிருந்து வருகை தந்த எமது பாடசாலையின் பழைய மாணவர் திரு..தில்லையம்பலம் அவர்கள் 300 அமெரிக்க டொலர்களை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.